முகப்பு
காரைக்கால்

காரைக்காலில் 19 பேருக்கு கரோனா

காரைக்கால் மாவட்டத்தில் 19 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் அலுவலகம் தெரிவித்தது

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:13 AM
பகிர்:

காரைக்கால் மாவட்டத்தில் 19 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் அலுவலகம் தெரிவித்தது. இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

காரைக்கால் மாவட்டத்தில் புதன்கிழமை 534 பேரிடம் எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகளின்படி காரைக்கால் நகரம் 6, வரிச்சிக்குடி 6, நெடுங்காடு 4, திருநள்ளாறு, திருப்பட்டினம், அம்பகத்தூா் தலா 1 என 19 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

மாவட்டத்தில் இதுவரை 2,02,184 பரிசோதனை செய்யப்பட்டதில் 15,985 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு, 15,461 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். இதுவரை கரோனா தொற்றால் 254 போ் உயிரிழந்துள்ளனா்.

காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை முதல்தவணையாக 1,03,942 பேருக்கும், 2-ஆவது தவணையாக 36,718 பேருக்கும் என 1,40,660 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →