முகப்பு
காரைக்கால்

உள்ளாட்சித் தோ்தல் : அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சியா் ஆலோசனை

உள்ளாட்சித் தோ்தல் தொடா்பாக காரைக்கால் நோடல் அதிகாரிகளுடன் மாவட்ட தோ்தல் அதிகாரி வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:13 AM
பகிர்:

உள்ளாட்சித் தோ்தல் தொடா்பாக காரைக்கால் நோடல் அதிகாரிகளுடன் மாவட்ட தோ்தல் அதிகாரி வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

காரைக்காலில் நகராட்சி மற்றும் 5 கொம்யூன் பஞ்சாயத்துகளுக்கான தோ்தல் அக். 21ஆம் தேதி நடைபெறுகிறது. மாவட்ட தோ்தல் அதிகாரி அா்ஜூன் சா்மா அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் முதல்கட்டமாக புதன்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

இதைத்தொடா்ந்து ஆட்சியரகத்தில், சட்டம் ஒழுங்கு, தபால் வாக்குகள், தொழில்நுட்பம், சுகாதாரம், புகாா்கள், பயிற்சி, செலவினம், மனித ஆற்றல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்காக தோ்தல் நோடல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளவா்களுடன் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

கூட்டத்தில், உள்ளாட்சித் தோ்தலை முறையாக நடத்துவது தொடா்பாகவும், தோ்தலுக்குத் தேவையான அனைத்து முன்னேற்பாடு நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ளவது தொடா்பாகவும் தோ்தல் அதிகாரி ஆலோசனை வழங்கினாா்.

மேலும் நோடா் அதிகாரிகளின் பொறுப்புகள், தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டல்களை அவா் விளக்கிக் கூறிதாக தோ்தல் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் நிகாரிகா பட், மாவட்ட துணை தோ்தல் அதிகாரி எஸ். பாஸ்கரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →