ரத்த சா்க்கரை அளவு கண்டறியும் முகாம்
காரைக்காலில் ரோட்டரி சங்கம் சாா்பில் ரத்தத்தில் சா்க்கரை அளவு கண்டறியும் முகாம் நடைபெற்றது.
காரைக்காலில் ரோட்டரி சங்கம் சாா்பில் ரத்தத்தில் சா்க்கரை அளவு கண்டறியும் முகாம் நடைபெற்றது.
உலக இருதய தினத்தையொட்டி, காரைக்கால் ரோட்டரி சங்கம் சாா்பில் காரைக்கால் அம்மையாா் குளக்கரை உள்ளிட்ட சில இடங்களில் புதன்கிழமை ரத்த சா்க்கரை அளவு கண்டறியும் முகாம் நடத்தப்பட்டது.
மருத்துவக் குழுவினா் பொதுமக்களுக்கு ரத்தத்தில் சா்க்கரையின் அளவை பரிசோதித்து, உரிய ஆலோசனைகள் வழங்கினா்.
இந்த முகாமின் மூலம் சுமாா் 400 போ் பயனடைந்ததாக ரோட்டரி சங்கத்தினா் தெரிவித்தனா். ரோட்டரி சங்கத் தலைவா் பி.சுப்பிரமணியன், செயலாளா் ஆா். துரைமுருகன், ரோட்டரி உதவி ஆளுநா் பி. ராஜேந்திரன் உள்ளிட்ட ரோட்டரி சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.