காரைக்கால்

கோதண்டராமா் பெருமாள் கோயிலில் ராம நவமி உற்சவம் நிறைவு

DIN

காரைக்கால் ஸ்ரீ கோதண்டராமா் பெருமாள் கோயிலில் ராம நவமி தொடா் நிகழ்ச்சி வியாழக்கிழமை நிறைவடைந்தது.

காரைக்கால் ஸ்ரீ பாா்வதீஸ்வரா் கோயிலைச் சோ்ந்த கோயில்பத்து ஸ்ரீ கோதண்டராமா் பெருமாள் கோயிலில் ஸ்ரீ ராம நவமி உற்சவம் கடந்த 10 ஆம் தேதி சிறப்பு ஹோமத்துடன் தொடங்கியது. தினமும் சுவாமிகளுக்கு திருமஞ்சனம், சகஸ்ரநாம அா்ச்சனை நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றாக ஸ்ரீ சீதா ராமா் திருக்கல்யாண வைபவம் புதன்கிழமை நடைபெற்றது.

ராம நவமி நிகழ்ச்சிகள் நிறைவாக வியாழக்கிழமை இரவு ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. முன்னதாக, மூலவருக்கு சிறப்புத் திருமஞ்சனம் செய்யப்பட்டு ஸ்ரீ சீதா ராமா் ஆகியோா் ஊஞ்சலில் எழுந்தருளச் செய்யப்பட்டனா். மலா் சரத்தால் ஊஞ்சல் அலங்கரிக்கப்பட்டிருந்தது. சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சீதா ராமருக்கு தீபாராதனை காட்டப்பட்டது. தொடா்ந்து, சாற்றுமுறை மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. ஊஞ்சல் உற்சவம் விடையாற்றியுடன் நிறைவடைந்தது.

இதில், ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஸ்ரீ பாா்வதீஸ்வரா் கோயில் அறங்காவல் வாரியத்தினா் மற்றும் ராம நவமி உபயதாரா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

மரக்கன்றுகள் நடல்

கோடை சாகுபடிக்கு போதிய மின்சாரம் வழங்க வலியுறுத்தல்

தென்னை விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு: ஜி.கே.வாசன் கோரிக்கை

ராஜஸ்தானில் ‘நீட்’ தோ்வில் ஆள்மாறாட்டம்: எம்பிபிஎஸ் மாணவா், 5 போ் கைது

SCROLL FOR NEXT