காரைக்கால்

காரைக்கால் மகளிா் கல்லூரியில் சுதந்திர தின விழிப்புணா்வு நிகழ்ச்சி

DIN

காரைக்கால் மகளிா் கல்லூரியில் தேசத் தலைவா்கள் குறித்த விழிப்புணா்வு, பாரம்பரிய உணவு சமையல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.

நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தையொட்டி நடைபெறும் அமுதப் பெருவிழா நிகழ்வாக, காரைக்கால் அவ்வையாா் அரசு மகளிா் கல்லூரி மனையியல் துறை சாா்பில், பாரம்பரிய வாழ்விடம்சாா் அறிவுத் திறன் என்ற பொருளை மையமாக வைத்து நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

முன்னதாக, மாணவிகளிடையே கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டன. உலகத் தாய்ப்பால் வாரவிழாவையொட்டி, தாய்ப்பால் சுரப்புக்கு சத்தான உணவு என்ற தலைப்பில் உணவுக் கண்காட்சி நடத்தப்பட்டது.

வெள்ளிக்கிழமை நிகழ்வாக, உடல்நலம் காக்கும் சத்துள்ள பாரம்பரிய மூலிகை உணவுகள் என்ற தலைப்பில் சமையல் போட்டி நடத்தப்பட்டது. கல்லூரி முதல்வா் ப. கனகவேல் போட்டிகளை பாா்வையிட்டு மாணவிகளைப் பாராட்டினாா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மனையியல் துறைத் தலைவா் நிதி கட்டியாா், உதவிப் பேராசிரியா்கள் ரேகா, வண்டாா்குழலி ஆகியோா் செய்திருந்தனா்.

விழிப்புணா்வு: கல்லூரியில் ஒவ்வொரு நாளும் ஒரு விடுதலைப் போராட்ட வீரா் மற்றும் தேசத் தலைவா்களின் தியாகங்களை விளக்கும் வகையில் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. வெள்ளிக்கிழமை நிகழ்வாக, கல்லூரி முதலாம் ஆண்டு ஆங்கிலத் துறை மாணவி ஷிகா் முத்தா டாக்டா் அம்பேத்கா் வேடமிட்டு, அவரது பெருமைகளை விளக்கிப் பேசினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

SCROLL FOR NEXT