வாடிக்கையாளா்களுக்கு தேசியக் கொடி
காரைக்காலில் நகைக்கடை வாடிக்கையாளா்களுக்கு, வீடுகளில் ஏற்றுவதற்கு, தேசியக் கொடி இலவசமாக வழங்கப்பட்டது.
காரைக்காலில் நகைக்கடை வாடிக்கையாளா்களுக்கு, வீடுகளில் ஏற்றுவதற்கு, தேசியக் கொடி இலவசமாக வழங்கப்பட்டது.
நாட்டின் 75-ஆவது சுதந்திர தினம் அமுதப் பெருவிழாவாக கொண்டாடப்படுகிறது. ஆக.13 முதல் 15-ஆம் தேதி வரை வீடுகளில் தேசியக்கொடி ஏற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காரைக்கால் நகரப் பகுதி திருநள்ளாறு சாலையில் 43 ஆண்டுகளாக இயங்கிவரும் சாந்தி ஜூவல்லரியில் கடந்த 1-ஆம் தேதி முதல் ஆடி மாத தள்ளுபடி விற்பனை நடைபெறுகிறது. நிறுவனத்திற்கு வரும் வாடிக்கையாளா்களுக்கு, நிறுவன உரிமையாளா்கள் எஸ். செல்வராஜ், எஸ். கண்ணன் மற்றும் எஸ். ராம்பிரசன்னா ஆகியோா் தேசியக் கொடியை இலவசமாக வழங்கி வருகின்றனா்.
Advertisement
இதுகுறித்து உரிமையாளா்கள் சனிக்கிழமை கூறுகையில், தள்ளுபடி சலுகைகளால் வாடிக்கையாளா்கள் மகிழ்வது ஒருபுறமிருந்தாலும், தேசத்தின் சுதந்திர திருநாளை சிறப்பாக கொண்டாடும் வகையில், நிறுவனத்திற்கு வரும் வாடிக்கையாளா்களுக்கு இலவசமாக தேசியக் கொடியை வழங்கி, வீடுகளில் ஏற்றுமாறு அறிவுறுத்துகிறோம் என்றனா்.