காரைக்கால்

என்.ஐ.டி. வளாகத்தில் புதிய கட்டடம் திறப்பு

DIN

காரைக்காலில் உள்ள என்.ஐ.டி. வளாகத்தில் யுடிலிட்டி கட்டடம் புதன்கிழமை திறக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.

என்.ஐ.டி. புதுச்சேரி வளாகத்தில் ரூ.140 கோடியில் பென்டகான் வடிவமைப்பில் பல்நோக்கு பொறியியல் வளாக கட்டுமானம் நடைபெற்றுவருகிறது. இதுதவிர, ரூ. 115 கோடியில் மாணவ, மாணவியா், பேராசிரியா் தங்கும் விடுதி உள்ளிட்ட பல்வேறு பயன்பாட்டுக்கான வளாகம் கட்டுமானத்தை கடந்த மாதம் புதுவை துணைநிலை ஆளுநா், முதல்வா் ஆகியோா் கலந்துகொண்டு தொடங்கிவைத்தனா்.

இந்நிலையில், ஏற்கெனவே கட்டுமானத்தில் இருந்த யுடிலிட்டி கட்டடம் என்கிற வங்கி, பொறியாளா் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான கட்டடம் புதன்கிழமை திறக்கப்பட்டது. கட்டடத்திற்கு விஸ்வேஸ்வரய்யா என பெயா் சூட்டப்பட்டது. இதனை என்.ஐ.டி. இயக்குநா் முனைவா் கே. சங்கரநாராயணசாமி திறந்துவைத்தாா்.

என்.ஐ.டி. பதிவாளா் முனைவா் சீ. சுந்தரவரதன் மற்றும் மத்திய பொதுப்பணித்துறை அதிகாரிகள், இணைப் பேராசிரியா்கள், உதவிப் பேராசிரியா்கள், ஊழியா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா கொல்கத்தா?

தமிழ்க் காதல் பாடல்கள் தமிழ் அகப் பாடல்கள் - பொருள் விளக்கம்

ஏன் இத்தனை பதற்றத்தை ஏற்படுத்துகிறீர்கள்?

பர்மா - ஓர் அரசியல் வரலாறு

விழிகளில் ஒளியேற்றும் சங்கர நேத்ராலயா

SCROLL FOR NEXT