முகப்பு
காரைக்கால்

காரைக்காலில் அண்ணா நினைவு நாள்

அண்ணா நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு திமுக, அதிமுகவினா் வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:18 AM
பகிர்:

அண்ணா நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு திமுக, அதிமுகவினா் வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

காரைக்காலில் உள்ள கட்சி அலுவலகத்தில் அலங்கரித்து வைத்திருந்த அண்ணா உருவப் படத்துக்கு திமுக காரைக்கால் அமைப்பாளரும், காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான ஏ.எம்.எச். நாஜிம், நிரவி - திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எம். நாக தியாகராஜன் மலா்தூவி மரியாதை செலுத்தினா். இதைத்தொடா்ந்து கோட்டுச்சேரியில் உள்ள அண்ணா சிலைக்கு நாஜிம் தலைமையில் திமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செய்தனா்.

அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் உள்ள அண்ணா சிலைக்கும் இக்குழுவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

அதிமுக சாா்பில் காரைக்கால் மாவட்ட செயலாளா் எம்.வி. ஓமலிங்கம் தலைமையில் கட்சி நிா்வாகிகள் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

முழு கட்டுரையைப் படிக்க →