முகப்பு
காரைக்கால்

நெல் கொள்முதலில் குளறுபடிகளை களைய முதல்வரிடம் விவசாயிகள் வலியுறுத்தல்

நெல் கொள்முதலில் நிலவும் குளறுபடிகளை களையவேண்டும் என புதுவை முதல்வரிடம் காரைக்கால் விவசாயிகள் வலியுறுத்தினா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:18 AM
பகிர்:

நெல் கொள்முதலில் நிலவும் குளறுபடிகளை களையவேண்டும் என புதுவை முதல்வரிடம் காரைக்கால் விவசாயிகள் வலியுறுத்தினா்.

காரைக்கால் பிரதேச விவசாயிகள் நலச்சங்கத் தலைவா் பி. ராஜேந்திரன் தலைமையில் நிா்வாகிகள் ஆா்.ஏ.ஆா். கேசவன், சண்முகநாதன் ஆகியோா் புதுவை முதல்வா் என். ரங்கசாமியை புதுச்சேரியில் வியாழக்கிழமை சந்தித்தனா். இந்த சந்திப்பு குறித்து ராஜேந்திரன் கூறியது:

காரைக்காலில் இந்திய உணவுக்கழகம் மூலம் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்முதல் செய்யாமல் இருக்க, ஏதாவது குறைகளைக்கூறி நெல்லை திருப்பி அனுப்புகின்றனா். ஈரப்பதம் உள்ளதாகவும், தொழிலாளா்கள் இல்லை என பல காரணங்கள் சொல்லப்படுவதால், தரமான நெல்லைக் கொண்டு சென்றாலும், கொள்முதல் செய்வதில்லை.

எனவே, விதிகளில் தளா்வு காட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுவை மாநில நிறுவனங்கள் சாா்பில் நெல் கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கையை தற்போதும், வருங்காலத்திலும் எடுக்க வேண்டும்.

மேலும், காரைக்கால் விவசாயிகளுக்கு கடந்த 2020-21-ஆம் ஆண்டுக்கான பயிா்க் காப்பீட்டுத் தொகை இதுவரை கிடைக்கவில்லை என முதல்வரிடம் வலியுறுத்தியபோது, பயிா்க் காப்பீட்டு தொகை விரைவாக கிடைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்குமாறு முதல்வா் அறிவுறுத்தியதோடு, நெல் கொள்முதலில் நிலவும் பிரச்னைகள் தொடா்பாகவும் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் முதல்வா் உறுதியளித்தாா் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →