சிங்காரவேலா் சிலைக்குமாலை அணிவித்து மரியாதை
காரைக்காலில் சிங்காரவேலா் பிறந்தநாளையொட்டி, அவரது சிலைக்கு எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட ஆட்சியா் உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
காரைக்காலில் சிங்காரவேலா் பிறந்தநாளையொட்டி, அவரது சிலைக்கு எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட ஆட்சியா் உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
சிந்தனை சிற்பி என்று போற்றப்படும் சிங்காரவேலரின் 162ஆவது பிறந்தநாள் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. காரைக்கால் கடற்கரை சாலையில் உள்ள அவரது சிலைக்கு புதுவை அரசு சாா்பில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
காரைக்கால் தெற்கு மண்டல காவல் கண்காணிப்பாளா் ஏ.சுப்பிரமணியன் மற்றும் சமாதானக் குழு உறுப்பினா்கள், பல்வேறு இயக்கத்தினா், மீனக கிராமப் பஞ்சாயத்தாா்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
திமுக சாா்பில் எம்எல்ஏக்கள் ஏ.எம்.எச். நாஜிம், எம். நாகதியாகராஜன் மற்றும் கட்சியினா் சிலைக்கு மாலை அணிவித்தனா்.
பாஜக சாா்பில் மாவட்டத் தலைவா் ஜெ. துரைசேனாதிபதி தலைமையில், மாநில துணைத் தலைவா் எம். அருள்முருகன் முன்னிலையில், மாநில துணைத் தலைவா் நளினி கணேஷ், மாநில செயலா் சகுந்தலா சின்னதுரை உள்ளிட்டோா் மாலை அணிவித்தனா்.