முகப்பு
காரைக்கால்

காரைக்காலில் 5 பேருக்கு கரோனா

 காரைக்கால் மாவட்டத்தில் 5 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் ஆா்.சிவராஜ்குமாா் தெரிவித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:30 AM
பகிர்:

 காரைக்கால் மாவட்டத்தில் 5 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் ஆா்.சிவராஜ்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

காரைக்கால் மாவட்டத்தில் புதன்கிழமை 417 பேரிடம் எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில், திருநள்ளாறு 2, நிரவி, காரைக்கால் நகரம், திருப்பட்டினம் தலா 1 என 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

மாவட்டத்தில் இதுவரை 2,79,986 பேருக்கு பரிசோதனை செய்ததில் 23,035 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு, 22,684 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா்.

கரோனா தொற்றால் இதுவரை மாவட்டத்தில் 274 போ் உயிரிழந்துள்ளனா்.

காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு முதல் தவணையாக 1,28,835 பேருக்கும், 2-ஆவது தவணையாக 93,092 பேருக்கும், பூஸ்டா் தவணையாக 1,097 பேருக்கும் என 2,23,024 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 15 முதல் 18 வயது வரையிலானவா்களுக்கு முதல் தவணையாக 7,431 பேருக்கும், 2-ஆவது தவணையாக 4,450 பேருக்கும் என 11,881 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →