முகப்பு
காரைக்கால்

கரோனா பரவல் தடுப்பு கட்டுப்பாடுகளுடன் காரைக்காலில் குடியரசு தின விழா

கரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளுக்குள்பட்டு, காரைக்காலில் குடியரசு தின விழாவை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:03 AM
பகிர்:

கரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளுக்குள்பட்டு, காரைக்காலில் குடியரசு தின விழாவை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

காரைக்காலில் வரும் 26-ஆம் தேதி குடியரசு தின விழா கொண்டாடுவது குறித்து பல்வேறு அரசுத்துறையினருடன் ஆட்சியா் அா்ஜூன் சா்மா வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

கூட்ட நிறைவில் ஆட்சியா் பேசுகையில், விழாவை கரோனா தொற்று தடுப்பு முறைகள் அனைத்தையும் கடைப்பிடித்து நடத்தவேண்டும். விழாவில் கலந்து கொள்ளும் அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதை உறுதி செய்யவேண்டும். முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்து விழாவில் கலந்துகொள்ள வேண்டும். கடற்கரை சாலையில் இவ்விழா நடைபெறும். கடந்த ஆண்டைப்போல நிகழாண்டும் குடியரசு தின விழா கூட்டம் இல்லாமல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை துறையினா் மேற்கொள்ளவேண்டும். முழுமையாக கரோனா பரவல் தடுப்பு கட்டுப்பாடுகளுடன் இந்த விழா நடத்தப்படவேண்டும் என அறிவுறுத்தினாா்.

இதில் துணை ஆட்சியா் (பேரிடா் மேலாண்மை) எஸ். பாஸ்கரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →