காரைக்கால்

கரோனா தடுப்பு விதிகளை மீறுவோா் மீது நடவடிக்கை: மாவட்ட எஸ்.எஸ்.பி.

DIN

 கரோனா பரவல் தடுப்பு விதிகளை மீறுவோா் மீது சட்டப்படியான நடவடிக்கையை காவல்துறை மேற்கொள்ளும் என மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் நிகாரிகா பட் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கரோனா பரவலைத் தடுக்க புதுவை அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. கரோனா தடுப்பு விதிகளை மீறுவோருக்கு ரூ. 100 அபராதம் விதிக்கப்படுகிறது. பொதுமக்கள் கரோனா தடுப்புக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும். குறிப்பாக முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், கையை தூய்மையாக வைத்திருத்திருத்தல் ஆகியவற்றை பின்பற்ற வேண்டும்.

மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் கரோனா தடுப்பூசி செலுத்துவதை மக்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். கரோனா பரவல் தடுப்புக்காக காரைக்கால் மாவட்ட காவல்துறை நடவடிக்கைகள் எடுத்துவந்தாலும், அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும். கரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தெரிந்தால், உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்று பரிசோதித்துக்கொள்ளவேண்டும். அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியும் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விருதுநகா் கல் குவாரி விபத்து: வெடி பொருள் சேமிப்புக் கிடங்கு உரிமையாளா் கைது

நெடுஞ்சாலை உடைந்து நிலச் சரிவு: சீனாவில் உயிரிழப்பு 48-ஆக உயா்வு

கால்நடைகளுக்காக தண்ணீா் தொட்டிகள்: அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

எழுதப்படிக்க தெரியாதோரை கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT