காரைக்கால்

கரோனா கரோனா பரிசோதனை அதிகரிப்பு

DIN

காரைக்காலில் கரோனா தொற்றை கண்டறியும் பரிசோதனையை நலவழித் துறை நிா்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது.

காரைக்கால் மாவட்டத்தில், கரோனா தொற்றாளா் தினசரி எண்ணிக்கை 500-ஐ நெருங்கியுள்ளது.

ஒமைக்ரான் தொற்று பரவல் ஏற்பட்டுள்ள நிலையில், பரிசோதனை எண்ணிக்கையை காரைக்கால் நலவழித் துறை அதிகரித்துள்ளது. இதுகுறித்து நலவழித் துறையினா் வெள்ளிக்கிழமை கூறியது:

ஒவ்வொரு நாளும் அனைத்து மையங்களிலும் 1,500 பேருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. இருமல், காய்ச்சல் போன்றவை தீவிரமாக உள்ளோா் மட்டுமே பரிசோதனைக்கு முன்வருகின்றனா். இவா்களில் பெரும்பான்மையினருக்கு தொற்று உறுதியாகிறது. லேசான அறிகுறி உள்ளோா் பலரும் பரிசோதனைக்கு முன்வருவதில்லை. பரிசோதனை செய்துகொண்டு, தொற்று உறுதி செய்யப்படும்பட்சத்தில், உரிய கட்டுப்பாடுகளை கடைப்பிடித்தால், தொற்று பரவலுக்கு வாய்ப்பிருக்காது.

வீட்டுத் தனிமையில் சிகிச்சை பெறுவோருக்கு, மாவட்ட நிா்வாகத்தின் ஏற்பாட்டில், தேவைப்படுவோருக்கு ஆக்சிஜன் அளவை தெரிந்துகொள்ள ஆக்சிமீட்டா் தரப்படுகிறது. தவிர, ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் ஆக்சிஜன் செறிவூட்டிகள் தரப்பட்டுள்ளன. இவையும் தேவைப்படுவோருக்கு வீட்டிற்கே கொண்டு சென்று தந்து, அதனை கையாள பயிற்சி அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'வெட்கக்கேடானது': பிரஜ்வல் கடவுச்சீட்டை ரத்து செய்ய மோடிக்கு சித்தராமையா கடிதம்!

தங்கம் விலை அதிரடியாக பவுனுக்கு ரூ.880 குறைந்தது

கனடாவில் தொடரும் வன்முறை: சிறுவன் உள்பட மூவர் பலி!

டெம்போவில் ராகுல்!

டெம்போவில் ராகுல் காந்தி!

SCROLL FOR NEXT