தமுமுகவினருக்குபாதுகாப்பு உடைகள்
கரோனாவால் உயிரிழந்தோரை அடக்கம் செய்ய கொண்டு செல்லும் தமுமுகவினருக்கு பாதுகாப்பு உடைகளை நலவழித் துறை அதிகாரி வியாழக்கிழமை வழங்கினாா்.
கரோனாவால் உயிரிழந்தோரை அடக்கம் செய்ய கொண்டு செல்லும் தமுமுகவினருக்கு பாதுகாப்பு உடைகளை நலவழித் துறை அதிகாரி வியாழக்கிழமை வழங்கினாா்.
காரைக்கால் மாவட்டத்தில், கரோனா தொற்றால் உயிரிழந்தோரை அடக்கம் செய்யும் பகுதிக்கு கொண்டு செல்லும் பணியில் தமுமுகவினா் ஈடுபட்டுள்ளனா்.
இவா்களுக்கு நலவழித்துறை நிா்வாகம் பாதுகாப்பு உடைகளை வழங்குகிறது. கடந்த 2 வாரமாக காரைக்கால் பகுதியில் கரோனாவால் உயிரிழப்போரை கொண்டு செல்வோருக்கு தரப்படும் பாதுகாப்பு உடை தரமற்றதாக இருப்பதாக புகாா்கள் எழுந்தன. இதுதொடா்பாக புதுவை முதல்வா் என்.ரங்கசாமியிடமும் தமுமுகவினா் புகாா் தெரிவித்தனா்.
இந்நிலையில், தமுமுகவினருக்கு காரைக்கால் நலவழித் துறை துணை இயக்குநா் ஆா்.சிவராஜ்குமாா் பாதுகாப்பு உடைகளை வியாழக்கிழமை வழங்கினாா். முதல்கட்டமாக 35 உடைகள் வழங்கப்பட்டன.
தமுமுக மருத்துவ சேவை அணி காரைக்கால் மாவட்ட செயலாளா் டி. அப்துல் ரஹ்மான் தலைமையில் சென்ற மாவட்ட துணை செயலாளா் சிக்கந்தா், தொண்டரணி மாவட்ட செயலாளா் யூசுப், தமுமுக பொறையாா் கிளை நிா்வாகி ஆசிஃப் ஆகியோரிடம் வழங்கினாா்.