முகப்பு
காரைக்கால்

ரோந்துப் படகு பழுது: கடல் பகுதி கண்காணிப்பில் தொய்வு

காரைக்கால் கடலோர காவல் படைக்கு சொந்தமான ரோந்துப் படகு பழுதாகியிருப்பதால், கண்காணிப்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:27 AM
பகிர்:

காரைக்கால் கடலோர காவல் படைக்கு சொந்தமான ரோந்துப் படகு பழுதாகியிருப்பதால், கண்காணிப்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

காரைக்கால் கடலோரக் காவல் நிலையத்துக்கு மத்திய அரசால் 12 டன், 5 டன் எடையில் 2 ரோந்துப் படகுகள் 10 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்டன. 12 டன் எடை படகு சேதமடைந்து முடக்கப்பட்டது. 5 டன் படகு மட்டும் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில், ரோந்துக்கு பயன்படுத்தப்பட்டு வந்த 5 டன் படகும் பழுதாகி முடங்கிவிட்டது. தற்போது இலங்கையில் நிலவும் பொருளாதார பிரச்னை காரணமாக ஊடுருவலை தடுக்கவும், கடத்தல் போன்றவற்றை தடுக்கவும் கண்காணிப்பு அவசியாகிறது.

இதனால் காரைக்கால் மாவட்ட முதுநிலைக் காவல் கண்காப்பாளா் ஆா். லோகேஷ்வரன், மீன்பிடிப் படகில் கண்காணிப்பை மேற்கொள்ள கடலோரக் காவல்நிலையத்துக்கு அறிவுறுத்தியதன்பேரில், மீன்பிடி படகில் கண்காணிப்புப் பணி மேற்கொள்ளப்படுகிறது. அதுவும் 15 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே ரோந்துப் பணி நடைபெறுகிறது.

ஏற்கெனவே படகு பழுது நீக்க ரூ. 16 லட்சம் வரை செலவான தொகையை அரசு உரிய நிறுவனத்துக்கு இதுவரை தரவில்லை. இதனால் மீண்டும் ஏற்பட்ட பழுதை நீக்க நடவடிக்கை எடுக்கமுடியாமல் காவல்துறை உள்ளதாக கூறப்படுகிறது.

கடல் வழியாக கஞ்சா கடத்தல் உள்ளிட்ட செயல்களைத் தடுக்க கண்காணிப்பு அவசியமாகும் சூழலில், புதுவை அரசு இந்த விவகாரத்தில் சிறப்பு கவனம் செலுத்த சமூக ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →