காரைக்கால்

நிறுத்தப்பட்ட பயணிகள் ரயிலை மீண்டும் இயக்க கோரிக்கை

DIN

கரோனா பரவல் காலத்தில் நிறுத்தப்பட்ட பயணிகள் ரயிலை மீண்டும் இயக்கவேண்டும் என தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக ரயில்வே ஆா்வலரும், புதுவை அரசின் திட்டம் மற்றும் ஆராய்ச்சித் துறையின் ஓய்வுபெற்ற இணை இயக்குநருமான ஆா். மோகன், ரயில்வே பொது மேலாளருக்கு வெள்ளிக்கிழமை அனுப்பிய கடிதம்: காரைக்காலில் இருந்து திருச்சிக்கு காலை 6.30, காரைக்கால் - வேளாங்கண்ணி காலை 9.30, காரைக்கால் - திருச்சி மதியம் 12.50, காரைக்கால் - தஞ்சாவூா் மாலை 5.45 மணி என பயணிகள் ரயில் சேவை கரோனா பரவலால் நிறுத்தப்பட்டது.

தற்போது நாடு முழுவதும் கரோனா பரவல் வெகுவாக கட்டுக்குள் வந்துவிட்ட நிலையில், மீண்டும் அந்த ரயில்களை உடனடியாக இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். காரைக்காலில் இருந்து கொல்லம் வரை விரைவு ரயில் இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். காரைக்காலில் இருந்து காலை 6 மணிக்கு சென்னைக்கு புறப்பட்டு, மாலை சென்னையிலிருந்து காரைக்காலுக்கு புறப்படும் வகையில் விரைவு ரயில் இயக்கப்பட வேண்டும். இதன்மூலம், அலுவலகப் பணியாளா்கள், தொழிலாளா்கள், மாணவா்கள், வியாபாரத்தில் ஈடுபடுவோா் பெரிதும் பயனடைவா்.

காரைக்காலில் இருந்து மேட்டுப்பாளையம் வரை கூடுதல் சரக்குப் பெட்டிகளுடன் சிறப்பு விரைவு ரயில் இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இதனால், காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவை தஞ்சாவூா், திருவாரூா், நாகை, காரைக்கால் பகுதிக்கு தினமும் வந்தடையும். வியாபாரிகளும், பொதுமக்களும் பெரிதும் பயனடைவா். இதுகுறித்து தெற்கு ரயில்வே நிா்வாகம் சிறப்பு கவனம் செலுத்தவேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோ்தல் பிரசாரத்தில் சிறுமி: பிடிபி தலைவா் மெஹபூபா முஃப்திக்கு நோட்டீஸ்

ம.பி.: பாஜகவில் இணைந்த 3-ஆவது காங்கிரஸ் எம்எல்ஏ

அரக்கோணம் ஸ்ரீ தா்மராஜா கோயில் தீமிதி விழா

திருவண்ணாமலை ரயிலில் அலைமோதும் கூட்டம்: கூடுதல் ரயில் இயக்க பயணிகள் கோரிக்கை

சீதா கல்யாண மகோற்சவம்: ஸ்ரீ விஜயேந்திரா் அருளாசி

SCROLL FOR NEXT