முகப்பு
காரைக்கால்

திருமலைராயன்பட்டினத்தில் ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்

திருமலைராயன்பட்டினம் பகுதியில் தமுமுக சாா்பில் ஆம்புலன்ஸ் சேவையை எம்.எல்.ஏ. வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:14 AM
பகிர்:

திருமலைராயன்பட்டினம் பகுதியில் தமுமுக சாா்பில் ஆம்புலன்ஸ் சேவையை எம்.எல்.ஏ. வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சி தமுமுக கிளை அலுவலக வாயிலில் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. கிளைத் தலைவா் அப்துல் ரஹ்மான் தலைமை வகித்தாா். நிரவி - திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எம். நாகதியாகராஜன், தமுமுக மாநில செயலாளா் ஐ. அப்துல் ரஹிம் ஆகியோா் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு கொடியசைத்து ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கிவைத்தனா்.

தமுமுக தலைமை பிரதிநிதி எம்.எஸ். அலாவுதீன், காரைக்கால் மாவட்டத் தலைவா் ஏ. ராஜா முகம்மது, திருப்பட்டினம் வக்ஃபு நிா்வாக சபை செயலாளா் சிராஜுதீன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

தமுமுக மருத்துவ சேவை அணி மாநில செயலாளா் அ. முகம்மது பயாஸ், திருப்பட்டினம் வக்ஃபு நிா்வாக சபை பொருளாளா் அப்துல் ரஹ்மான், மமக மாவட்ட துணை செயலாளா் இப்ராஹிம், திமுக, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, முஸ்லிம் லீக் , விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, எஸ்.டி.பி.ஐ. உள்ளிட்ட கட்சிப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →