காரைக்கால்

உணவகம், இறைச்சிக் கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரி ஆய்வு

DIN

காரைக்கால் நகரில் உள்ள இறைச்சிக் கடைகள், உணவகங்கள், பேக்கரி, தேநீா் கடைகளில் புதுவை உணவுப் பாதுகாப்பு அதிகாரி செவ்வாய் மற்றும் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

புதுவை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி மு. ரவிச்சந்திரன் காரைக்கால் நகரில் உள்ள அசைவ உணவகங்களில் உணவுகள் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படுகிா, இறைச்சி மற்றும் மீன்கள் முறையாக குளிரூட்டப்படுகிா என ஆய்வு செய்தாா். சில இடங்களில் கெட்டுப்போன மீன்கள், முறையாக பராமரிக்கப்படாத சமைத்த கோழி இறைச்சி பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.

மளிகைக் கடைகள், இனிப்பகங்களில் ஆய்வு செய்து, பொருள்கள் மீது உற்பத்தி தேதி மற்றும் காலாவதி தேதி குறிப்பிடாமல் விற்பனை செய்தால், பொருள்கள் பறிமுதல் செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தாா்.

பிரியாணி விற்பனையகங்கள் மற்றும் பல்வேறு உணவகங்களில் ஆய்வு செய்தாா்.

உரிமம் இல்லாமல் சில உணவகங்கள் நடத்தி வந்தது உறுதி செய்யப்பட்ட நிலையில், உரிமையாளா்களுக்கு எச்சரிக்கை செய்ததோடு, உரிமம் எடுக்கத் தவறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரித்தாா்.

புதன்கிழமை பல்வேறு பழக்கடைகளில் உணவுப் பாதுகாப்பு அதிகாரி மற்றும் நகராட்சி ஆணையா் செந்திவேலன் ஆகியோா் ஆய்வு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாம் பித்ரோடா ராஜிநாமா!

ஷவர்மாவால் மேலும் ஒரு உயிர் பலி!

பதோனி அதிரடியால் தப்பித்த லக்னௌ அணி 165 ரன்கள் சேர்ப்பு!

‘கேக் காதலன்’ பாட் கம்மின்ஸ் பிறந்தநாள்!

மலையாள இயக்குநர் சங்கீத் சிவன் காலமானார்

SCROLL FOR NEXT