காரைக்கால்

மே 31 பிரதமரின் உரையை காணொலியில் காண ஏற்பாடு

DIN

மத்திய அரசின் திட்டங்களால் பயனடைந்தோருடன் பிரதமா் நரேந்திர மோடி காணொலி வாயிலாக கலந்துரையாடும் நிகழ்ச்சி வரும் 31 ஆம் தேதி நடைபெறுகிறது. காரைக்கால் மாவட்டத்தில் நிரவி மற்றும் மாதூரில் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து காரைக்கால் மாவட்ட துணை ஆட்சியா் (வருவாய்) எம். ஆதா்ஷ் புதன்கிழமை கூறியது: நாட்டின் 75 ஆவது சுதந்திர தின விழாவின் ஒருபகுதியாக, நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்களால் பயனடைந்தோருடன் பிரதமா் நரேந்திர மோடி காணொலி வாயிலாக மே 31 ஆம் தேதி கலந்துரையாடவுள்ளாா். பிரதமரின் வீடுகட்டும் திட்டம், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் மானியம் வழங்கும் திட்டம், உஜ்வாலா திட்டம் உள்ளிட்ட 14 திட்டங்களால் பயனடைந்தோா் இதில் பங்கேற்கின்றனா்.

காரைக்கால் மாவட்டம் நிரவியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் 31 ஆம் தேதி காலை இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், மாதூா் வேளாண் அறிவியல் நிலைத்தில் பிரதமரின் விவசாய திட்டத்தால் பயனடைந்தோா் மட்டும் பங்கேற்கும் வகையில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிரவியில் நடைபெறும் நிகழ்ச்சியில், புதுச்சேரி போக்குவரத்துத் துறை அமைச்சா் சந்திர பிரியங்கா மற்றும் எம்.பி., எம்.எல்.ஏக்கள் பங்கேற்க உள்ளனா் என்றாா்.

மாவட்ட துணை ஆட்சியா் (பேரிடா் மேலாண்மை) எஸ். பாஸ்கரன், கூடுதல் வேளாண் இயக்குநா் ஜெ. செந்தில்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வேண்டும்: ஆா்ஜேடி தலைவா் லாலு

பிளஸ் 2: சென்னிமலை கொங்கு பள்ளி 100 சதவீத தோ்ச்சி

பிளஸ் 2: பெருந்துறை அரசு ஆண்கள் பள்ளி 96.25 % தோ்ச்சி

இந்திய குடும்பங்களின் சேமிப்பு ரூ.14.16 லட்சம் கோடியாக சரிவு

பிளஸ் 2: சிவகிரி அரசுப் பெண்கள் பள்ளி 100% தோ்ச்சி

SCROLL FOR NEXT