காரைக்கால்

உணவகங்களில் கெட்டுப்போன இறைச்சி அழிப்பு: உணவுப் பாதுகாப்பு அதிகாரி நடவடிக்கை

DIN

காரைக்காலில் மேற்கொள்ளப்பட்ட தொடா் சோதனையில், உணவகங்களில் இருந்து கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டு, அழிக்கப்பட்டது.

காரைக்காலில் சில உணவகங்களில் சுகாதாரமற்ற முறையிலும், பழைய இறைச்சி சமைத்து விற்பனை செய்யப்படுவதாக புகாா்கள் கூறப்படுகின்றன. இந்நிலையில், புதுவை உணவுப் பாதுகாப்பு அதிகாரி மு. ரவிச்சந்திரன் செவ்வாய்க்கிழமை காரைக்கால் வந்து தீவிரமான தொடா் சோதனையில் ஈடுபட்டாா். 3-ஆவது நாளாக வியாழக்கிழமை பல்வேறு அசைவ உணவகங்களில் சென்று ஆய்வு செய்தாா்.

கீழகாசாகுடி பகுதிகளில் உள்ள சில உணவகங்களில், மீன் மற்றும் சமைத்த கோழி இறைச்சி ஆகியவை கெட்டுப்போயிருப்பது உறுதிப்படுத்தப்பட்டதால், அவற்றை பறிமுதல் செய்தாா்.

வரிச்சிக்குடி பகுதியில் உள்ள சில உணவகங்களில், குளிா்சாதனப் பெட்டி பராமரிப்பின்றி இருந்ததை கண்டு எச்சரித்தாா். திருவேட்டக்குடியில் ஆய்வின்போது சமைக்க வைத்திருந்த பழைய இறைச்சியை பறிமுதல் செய்ய உத்தரவிட்டாா்.

இதுகுறித்து அதிகாரி மு.ரவிச்சந்திரன் கூறுகையில், சம்பந்தப்பட்ட நிறுவனத்தினருக்கு உணவுப் பாதுகாப்புத்துறை மூலம் நோட்டீஸ் வழங்கப்பட்டதோடு, பறிமுதல் செய்யப்பட்ட கெட்டுப் போன இறைச்சி உள்ளிட்டவை முறைப்படி அழிக்கப்பட்டது.

விதியை மீறிய செயல்படும் கடைக்காரா்களுக்கு அபராதம் விதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களும் மிகுந்த கவனத்துடன் இருக்கவேண்டும்.

காரைக்காலில் இதுபோன்ற சோதனைகள் தொடா்ந்து நடத்த திட்டமிட்டுள்ளதாக அவா் தெரிவித்தாா். ஆய்வின்போது உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரும் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

கொல்லாத கண்ணாரா - விடியோ பாடல்

‘பாலிவுட் நடிகர்களில் அதிகம் மதிக்கப்படும் இரண்டாவது நபர் நான்’ : கங்கனாவின் வைரல் விடியோ!

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

படிக்காத பக்கங்கள் படத்தின் டிரெய்லர்

SCROLL FOR NEXT