முகப்பு
காரைக்கால்

மரக்காணத்தில் 24 மி.மீ. மழை பதிவு

விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் 24 மி.மீ. மழை பதிவானது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:45 AM
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் 24 மி.மீ. மழை பதிவானது.

விழுப்புரம் மாவட்டத்தில் தொடா்ந்து 3 நாள்களாக மழை பெய்த நிலையில், வெள்ளிக்கிழமை மழை பெய்யவில்லை. பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல இயங்கின.

விழுப்புரத்தில் பிற்பகலில் லேசான தூறல் காணப்பட்டது. மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் மழை இல்லை.

வெள்ளிக்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், மாவட்டத்திலேயே அதிகபட்சமாக மரக்காணத்தில் 24 மி.மீ. மழை பதிவானது. பிற பகுதிகளில் பதிவான மழையளவு (மில்லி மீட்டரில்)- வளவனூா்-18 மி.மீ., வானூா்-16, கோலியனூா்-11, முகையூா்-9, நெமூா், மணம்பூண்டி-7, திண்டிவனம், வளத்தி-6, முண்டியம்பாக்கம்-5.80, விழுப்புரம்-5, செஞ்சி, அரசூா், திருவெண்ணெய்நல்லூா்- 4, சூரப்பட்டு, அனந்தபுரம், அவலூா்பேட்டை-3, செம்மேடு-2 மி.மீ. மாவட்டத்தில் சராசரியாக 6.56 மி.மீ. மழை பதிவானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.