காரைக்கால்

காரைக்கால்: கடலில் குளித்த மருத்துவக் கல்லூரி மாணவர் மாயம்

DIN

காரைக்கால் கடல் பகுதியில் நண்பர்களுடன் குளித்த மருத்துவக் கல்லூரி மாணவர் ஒருவர் மாயமானார். 

திருவாரூர் மருத்துவக் கல்லூரியில் துணை மருத்துவப்  படிப்பு பயிலும் மாணவ, மாணவியர்  15 பேர் காரைக்காலுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்துள்ளனர். இவர்கள் காரைக்கால் கடற்கரைக்கு சென்றுள்ளனர். 3 மாணவிகளும், ஒரு மாணவரும் கடலில் இறங்கி குளித்துள்ளனர். பருவமழை தொடங்கியுள்ள நிலையில் கடல் சற்று கொந்தளிப்புடன் காணப்படுவதோடு மட்டுமல்லாது, காரைக்கால் கடல் பகுதியில் மிகவும் ஆபத்தான இடமாக கருதப்படுமிடத்தில் இவர்கள் குளித்தபோது அலையில் சிக்கியுள்ளனர். 

கரையிலிருந்த மற்றவர்கள் இவர்களது தவிப்பை பார்த்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு 3 மாணவியரை கரைக்கு கொண்டு வந்தனர். மாணவர் மட்டும் அலையில் இழுத்துச் செல்லப்பட்டார். இதுகுறித்து காரைக்கால் போலீஸாருக்கு அளித்த தகவலின்பேரில் மண்டல காவல் கண்காணிப்பாளர் சுப்பிரமணியன், நகரக் காவல்நிலைய போலீஸார், கடலோரக் காவல்நிலைய போலீஸார் கடற்கரைக்கு விரைந்தனர். கரைக்கு கொண்டுவரப்பட்ட 3 மாணவிகளையும் அரசுப் பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.

இதுகுறித்து மண்டல காவல் கண்காணிப்பாளர் சுப்பிரமணியன் கூறுகையில், திருவாரூர்  மருத்துவக் கல்லூரியில் துணை மருத்துவப் படிப்பான ரேடியாலஜி உள்ளிட்ட பிரிவுகள்  பயின்றுவருவோர் காரைக்கால் வந்து கடலில் குளித்துள்ளனர். இதில் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த சிவகுமார் என்கிற மாணவர் மாயமாகியுள்ளார். மீட்கப்பட்ட மாணவியர் 3 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். இந்திய கடலோரக் காவல்படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

கொல்லாத கண்ணாரா - விடியோ பாடல்

‘பாலிவுட் நடிகர்களில் அதிகம் மதிக்கப்படும் இரண்டாவது நபர் நான்’ : கங்கனாவின் வைரல் விடியோ!

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

படிக்காத பக்கங்கள் படத்தின் டிரெய்லர்

SCROLL FOR NEXT