திருநள்ளாற்றில் நாளை பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம்
திருநள்ளாற்றில் செவ்வாய்க்கிழமை (செப். 13) பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெறவுள்ளது என காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் தெரிவித்துள்ளது.
திருநள்ளாற்றில் செவ்வாய்க்கிழமை (செப். 13) பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெறவுள்ளது என காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: காரைக்கால் மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில், பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயில் வரிசை வளாகத்தில் (கியூ காம்ப்ளக்ஸ்) செப். 13 ஆம் தேதி காலை 10 மணிமுதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் அனைத்து அரசுத் துறை அலுவலகங்களின் தலைமை அதிகாரிகள் பங்கேற்பாா்கள். பொதுமக்கள் இக்கூட்டத்தில் பங்கேற்று தங்கள் குறைகளை தெரிவித்து பயனடையலாம்.