முகப்பு
காரைக்கால்

கேக் என நினைத்து எலி விஷத்தை சாப்பிட்ட பள்ளி மாணவி பலி

 கேக் என நினைத்து எலி விஷத்தை சாப்பிட்ட பள்ளி மாணவி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:18 AM
பகிர்:

 கேக் என நினைத்து எலி விஷத்தை சாப்பிட்ட பள்ளி மாணவி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரி பகுதி ராஜா மகள் சலேத் நிதிக்ஷனா (14). இவா் 7 ஆம் வகுப்பு படித்துவந்தாா். இவருக்கு தசை சுருக்க நோய் உள்ளதாகவும், மெதுவாக நடந்து செல்லக்கூடியவா் என்றும் கூறப்படுறது. இவா், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வாந்தி எடுத்துள்ளாா். இதுகுறித்து அவரது தாயாா் ஸ்டெல்லா மேரி கேட்டபோது, ஜன்னல் ஓரத்தில் வைத்திருந்த கேக்கை சாப்பிட்டதாக கூறினாராம்.

அது எலி விஷம் என கூறிய ஸ்டெல்லா மேரி, மகளை அரசுப் பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தாா். எனினும் சிகிச்சை பலனின்றி சலேத் நிதிக்ஷனா திங்கள்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.

இதுகுறித்து கோட்டுச்சேரி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →