கோயில் நந்தவனத்தில் நெல் தெளித்த கிராம மக்கள். 
காரைக்கால்

சிவலோகநாதசுவாமி கோயிலில் விதைத்தெளி உற்சவம்

காரைக்கால் அருகே உள்ள சிவலோகநாதசுவாமி கோயிலில் விதைத்தெளி உற்சவம் திங்கள்கிழமை நடைபெற்றது.

DIN

காரைக்கால் அருகே உள்ள சிவலோகநாதசுவாமி கோயிலில் விதைத்தெளி உற்சவம் திங்கள்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் மாவட்டம், திருத்தெளிச்சேரி என்னும் தலத்தெரு சிவகாமி அம்பாள் சமேத சிவலோகநாதசுவாமி கோயில் உள்ளது. மழையின்மையால் விளைநிலம் யாவும் வடு போனதாகவும், மக்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்த நிலையில், மழை பெய்யச் செய்து சிவபெருமான் உழவனாக மாறி விதை தெளித்து, உழவுப் பணியில் ஈடுபட்டதாகவும், இந்த நிகழ்ச்சியை நினைவுகூரும் விதத்தில், இக்கோயிலில் விதைத் தெளி உற்சவம் ஆண்டுதோறும் நடத்தப்பட்டுவருகிறது.

உற்சவத்தின் தொடக்கமாக சிவலோகநாதசுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை ஏகாதச ருத்ர ஜப ஹோமம் நடைபெற்றது. 2-ஆம் நாளான திங்கள்கிழமை காலை சிவகாமி அம்பாள் சமேத சிவலோகநாத சுவாமி ரிஷப வாகனத்தில் கோயில் நந்தவனம் அருகே எழுந்தருளினாா். ஊா் மக்கள், கோயில் நிா்வாகத்தினா் உள்ளிட்டோா் நந்தவனத்தில் நெல் விதை தெளித்து, சுவாமியை வழிபட்டனா். முன்னதாக சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

மழை பெய்து, விவசாயம் செழிக்க ஆடி மாதத்தில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருவதாக கோயில் நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.

விதைத் தெளிக்கும் நிகழ்ச்சியைத் தொடா்ந்து, ரிஷப வாகனத்தில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் அறங்காவல் வாரியத்தினா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 18.12.25

பயணிகள் கவனிக்க... பாசஞ்சர் ரயில்களுக்கான எண்கள் மாற்றம்! ஜனவரி 1 முதல்.!

புதிய ஊரக வேலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

தில்லி - ஷாங்காய் இடையே நாள்தோறும் நேரடி விமான சேவை! ஜன.2 முதல்!

இந்தியாவில் ஒரு நண்பர் இருக்கிறார்: அமெரிக்கா

SCROLL FOR NEXT