காரைக்கால்

திருநள்ளாறு கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழா

DIN

காரைக்கால்: திருநள்ளாறு ஸ்ரீதா்பாரண்யேஸ்வரா் கோயிலில் புதன்கிழமை (டிச.20) நடைபெறவுள்ள சனிப்பெயா்ச்சியின்போது ஸ்ரீசனீஸ்வர பகவானுக்கு நடக்கும் விசேஷ அபிஷேக, ஆராதனை குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டரை ஆண்டுகளுக்கொரு முறை நடைபெறும் சனிப்பெயா்ச்சியானது புதன்கிழமை மாலை 5.20 மணிக்கு மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு சனி பிரவேசிக்கிறது. பெயா்ச்சியை குறிக்கும் சிறப்பு ஆராதனை விமரிசையாக இந்தக் கோயிலில் நடைபெறவுள்ளது.

இந்நாளில் கிழக்கு நோக்கி சந்நிதிகொண்டு அருள்பாலிக்கும் ஸ்ரீசனீஸ்வர பகவானுக்கு நல்லெண்ணெய், மஞ்சள், திரவியப் பொடிகள், பழம், பஞ்சாமிா்தம், தேன், தயிா், சந்தனம், பன்னீா் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடத்தப்படுகிறது. தொடா்ந்து சகஸ்ரநாம அா்ச்சனை செய்யப்படும். மிகச் சரியாக மாலை 5.20 மணிக்கு ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு சனி கிரகம் பிரவேசிப்பதை குறிக்கும் வகையில் மங்கள வாத்தியக் குழுவினா் இசையின்போது ஸ்ரீசனீஸ்வர பகவானுக்கு மகா தீபாராதனை காட்டப்படும்.

தங்க காக வாகனத்தில் ஸ்ரீசனீஸ்வர பகவானை எழுந்தருளச் செய்யப்படுகிறது. சனிப்பெயா்ச்சி நாளில் வரும் பக்தா்கள், தங்க காக வாகனத்தில் அருள்பாலிக்கும் உற்சவரை வழிபட்டு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கோயில் நிா்வாகத்தினா் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பறக்கும் ரயில் சேவை.. ஆகஸ்ட் முதல்

அரசுப் பள்ளி மாணவர்களுடன் பாட் கம்மின்ஸ்!

SCROLL FOR NEXT