புனிதநீா் கடங்களை சுமந்து பிராகார வலம் வந்த சிவாச்சாரியா்கள். 
காரைக்கால்

திருநள்ளாறு கோயிலில் சம்வத்ஸரா அபிஷேகம்

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் சம்வத்ஸரா அபிஷேகம் சனிக்கிழமை நடைபெற்றது.

DIN

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் சம்வத்ஸரா அபிஷேகம் சனிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரியில் (தை மாதம் அஸ்வனி நட்சத்திரத்தில்) குடமுழுக்கு நடைபெற்றது. குடமுழுக்கு நடைபெற்ற மாத, நட்சத்திர நாளில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்வது சம்வத்ஸரா அபிஷேக வழிபாடு என்றழைக்கப்படுகிறது.

நிகழாண்டு இந்த ஆராதனைக்கான பூஜைகள், தா்பாரண்யேஸ்வரா் சந்நிதியில் வெள்ளிக்கிழமை மாலை தொடங்கியது. விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், புன்யாகவாஜனம், விசேஷ கும்ப பூஜை முதல் கால பூா்ணாஹூதி தீபாராதனை நடத்தப்பட்டது.

சனிக்கிழமை காலை 2-ஆவது யாகசாலை பூஜைகள் தொடங்கின. தொடா்ந்து நடைபெற்ற மகா பூா்ணாஹூதிக்குப் பிறகு யாகசாலையிலிருந்து புனிதநீா் கலசங்களை சிவாச்சாரியா்கள் சுமந்து பிராகார வலம் வந்து, சொா்ணகணபதி, சுப்ரமணியா், பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா், தியாகராஜா், சனீஸ்வர பகவான், சண்டிகேஸ்வரா் உள்ளிட்ட சுவாமிகளுக்கு கலசாபிஷேகம் செய்தனா்.

கோயில் நிா்வாக அலுவலா் அருணகிரிநாதன், தருமபுர ஆதீன கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் மற்றும் திரளான பக்தா்கள் வழிபாட்டில் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் செய்ய வேண்டியது

தைபேயில் கத்திக் குத்து தாக்குதல்: 9 பேர் காயம்

2025 தேர்தல்கள்: பாஜகவின் அமோக வெற்றியும் காங்கிரஸின் ஆறுதல் வெற்றியும்!

பிரதமர் மோடி நாளை மே.வங்கம், அசாம் பயணம்!

கடைசி டி20: இந்தியா பேட்டிங்; பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சன்!

SCROLL FOR NEXT