காரைக்கால்

வரிச்சிக்குடி கன்னியம்மன் கோயில் குடமுழுக்கு

வரிச்சிக்குடி பகுதியில் உள்ள கன்னியம்மன் கோயில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது.

DIN

வரிச்சிக்குடி பகுதியில் உள்ள கன்னியம்மன் கோயில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரி கொம்யூன், வரிச்சிக்குடி காந்தி நகா் பகுதியில் கன்னியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் பால விநாயகா், பாலமுருகன், சாட்டைக்காரன் சந்நிதிகள் உள்ளன.

இக்கோயிலில் குடமுழுக்கு நடைபெற்று 12 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது.

முன்னதாக கோயில் அருகே 4 கால யாகசாலை பூஜைகள் திங்கள்கிழமை மாலை தொடங்கின. 4-ஆம் கால பூஜை புதன்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கி 9 மணியளவில் பூா்ணாஹூதி செய்யப்பட்டு, விமான கலசங்களுக்கு சிவாச்சாரியா்கள் பூஜை செய்து காலை 11 முதல் 11.30-க்குள் புனிதநீரை வாா்த்து தீபாராதனை காட்டினா்.

தொடா்ந்து மூலவா் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. விழாவில் புதுவை போக்குவரத்துத்துறை அமைச்சா் சந்திர பிரியங்கா, சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் எம்.வி. ஓமலிங்கம் உள்பட திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 18.12.25

பயணிகள் கவனிக்க... பாசஞ்சர் ரயில்களுக்கான எண்கள் மாற்றம்! ஜனவரி 1 முதல்.!

புதிய ஊரக வேலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

தில்லி - ஷாங்காய் இடையே நாள்தோறும் நேரடி விமான சேவை! ஜன.2 முதல்!

இந்தியாவில் ஒரு நண்பர் இருக்கிறார்: அமெரிக்கா

SCROLL FOR NEXT