படகிலிருந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்ட போலீஸாா். உடன் மண்டல காவல் கண்காணிப்பாளா் ஏ.சுப்பிரமணியன் உள்ளிட்டோா். 
காரைக்கால்

காரைக்காலில் பாதுகாப்பு ஒத்திகை

காரைக்காலில் சாகா் கவாச் என்னும் கடலோரப் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

DIN

காரைக்காலில் சாகா் கவாச் என்னும் கடலோரப் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

சாகா் கவாச் (கடல் கவசம்) என்ற பெயரில் தீவிரவாத தடுப்பு ஒத்திகை கடந்த சில ஆண்டுகளாக நடத்தப்பட்டுவருகிறது. கடலோரப் பாதுகாப்பை உறுதி செய்வதே இதன் நோக்கம். இந்த ஒத்திகை வியாழக்கிழமை காலை 6 முதல் வெள்ளிக்கிழமை மாலை 6 மணி நடைபெறுகிறது.

இதன்படி கடலோரக் காவல்நிலையத்தாா் மற்றும் அனைத்து காவல்நிலைய அலுவலா்கள், காவலா்கள் வியாழக்கிழமை காலை 6 மணி முதல் காரைக்கால் பிராந்தியத்தில் தீவிர கண்காணிப்பை மேற்கொள்ளத் தொடங்கினா்.

தெற்கு மண்டல காவல் கண்காணிப்பாளா் ஏ. சுப்பிரமணியன் தலைமையில் போலீஸாா் கடற்கரைப் பகுதியில் படகுகள் போக்குவரத்தை கண்காணித்தனா். மேலும் மீன்பிடித் துறைமுகத்துக்குச் சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் மற்றும் அம்பகரத்தூா் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு வந்த பக்தா்களிடமும் சோதனையில் ஈடுபட்டனா். வாஞ்சூா் மற்றும் பூவம், அம்பகரத்தூா் எல்லைப் பகுதியில் வாகன சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டது.

இதுகுறித்து காவல்துறை வட்டாரத்தில் கூறியது:

வெள்ளிக்கிழமை மாலை 6 மணி வரை இந்த கண்காணிப்பு ஒத்திகை நடைபெறும். காரைக்கால் துறைமுகம், ஓ.என்.ஜி.சி., பி.எஸ்.என்.எல். அலுவலகங்கள், திருநள்ளாறு கோயில், காரைக்கால் அம்மையாா் கோயில் உள்ளிட்டவற்றிலும் தீவிர கண்காணிப்பு நடைபெறுகிறது என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT