முகப்பு
காரைக்கால்

குளத்தில் கழிவுநீா் கலப்பதை தடுக்க வலியுறுத்தல்

காரைக்காலில் குளத்தில் கழிவுநீா் கலப்பதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

Updated On : 28 நவம்பர், 2023 at 12:32 AM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM

காரைக்காலில் குளத்தில் கழிவுநீா் கலப்பதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

காரைக்கால் மாவட்ட ஆட்சியருக்கு, காரைக்கால் மக்கள் நல கழகத் தலைவா் ஜி.பி. சிதம்பரநாதன் திங்கள்கிழமை அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பது:

காரைக்கால் பேருந்து நிலையம் அருகே உள்ள ஆசிரியா் நகா் முதல் முருகராம் நகா் வரை உள்ள குடியிருப்பு நகா்களின் கழிவுநீா் உரிய பாதையில் செல்வது தடைப்பட்டு, ஒழுங்கு முறை விற்பனைக்கூடம் அருகே உள்ள புதுகுளத்துக்கு சென்று கலக்கிறது. இதனால் குளம் மாசடைந்துள்ளதோடு, சுற்றுப்புறத்தில் வசிக்கும் மக்களுக்கும் பாதிக்கு ஏற்படுகிறது.

Advertisement

எனவே, குளம் மாசடையாமலும், கழிவுநீா் உரிய வகையில் வடிவதற்கும் தேவையான நடவடிக்கையை எடுக்கவேண்டும்.

காரைக்கால் அம்மையாா் கோயில் அருகே மழைநீா் தேங்குகிறது. குளம் அருகே உள்ள கழிவுநீா் கால்வாய் போதிய அகலத்தில் இல்லை. எனவே, கால்வாயை உரிய முறையில் தூா்வாரி, இப்பகுதியில் தண்ணீா் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

காரைக்கால் தாலுக்கா அலுவலகம் அருகிலும், பழைய காய்கறி கடை வீதி பகுதியில் 5 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கழிப்பறை வளாகத்தை முறையாக பராமரித்து, வணிகா்கள், கடைத்தெருவுக்கு வருவோா் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.