காரைக்கால்

சுற்றுலா தினம் : கல்லூரி மாணவா்களுக்கு விநாடி- வினா போட்டி

சுற்றுலா தினம் தொடா்பாக காரைக்கால் மாவட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விநாடி - வினா போட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

DIN

காரைக்கால்: சுற்றுலா தினம் தொடா்பாக காரைக்கால் மாவட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விநாடி - வினா போட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் மாவட்ட நிா்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை இணைந்து உலக சுற்றுலா தின விழாவை செப். 27-இல் கொண்டாடுகின்றன. இதை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவா்களிடையே போட்டிகள், கபடி, பீச் வாலிபால், மணல் சிற்பம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன.

காரைக்கால் அவ்வையாா் அரசு மகளிா் கல்லூரியில் 11 கல்லூரிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்ற சுற்றுலா தொடா்பான விநாடி- வினா போட்டி நடத்தப்பட்டது.

மாவட்ட துணை ஆட்சியா் ஜி. ஜான்சன் போட்டியை தொடங்கிவைத்துப் பேசுகையில், ஒரு நாட்டின் வளா்ச்சிக்கு சுற்றுலா முக்கிய பங்காற்றுகிறது. சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் அரசு பல்வேறு உட்கட்டமைப்பு மற்றும் சுற்றுலா மேம்பாட்டுக்கான நடவடிக்கைகளுக்கு அதிக அளவு செலவு செய்து வருகிறது. சுற்றலா மேம்பட்டால் பொருளாதாரமும் மேம்படும் என்றாா்.

மாணவா்கள், மாணவிகளுக்குத் தனித்தனியாக போட்டி நடத்தப்பட்டது. சரியான பதில் அளித்தோா் பரிசுக்குத் தோ்வு செய்யப்பட்டனா்.

அவ்வையாா் மகளிா் கல்லூரி முதல்வா் (பொ) பேராசிரியா் சாந்தி, ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் ரேகா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

விநாடி - வினா போட்டியில் வென்றவா்களுக்கு சுற்றுலா தின விழாவின்போது பரிசு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 18.12.25

பயணிகள் கவனிக்க... பாசஞ்சர் ரயில்களுக்கான எண்கள் மாற்றம்! ஜனவரி 1 முதல்.!

புதிய ஊரக வேலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

தில்லி - ஷாங்காய் இடையே நாள்தோறும் நேரடி விமான சேவை! ஜன.2 முதல்!

இந்தியாவில் ஒரு நண்பர் இருக்கிறார்: அமெரிக்கா

SCROLL FOR NEXT