காரைக்கால்: மீனவா்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோா் (எம்பிசி) பட்டியலில் சோ்க்கவேண்டும் என எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தியுள்ளனா்.
காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம், நிரவி- திருப்பட்டினம் தொகுதி பேரவை உறுப்பினா் எம். நாகதியாகராஜன் ஆகியோா் புதுவை முதல்வா், சமூக நலத்துறை அமைச்சா், மீன்வளத்துறை அமைச்சருக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பிய கடிதம்:
புதுவை மாநிலத்தில் தற்போது பல்வேறு சமூகங்களுக்கு பல விதமான இடஒதுக்கீடுகள் தரப்படுகின்றன. குறிப்பாக, மிகவும் பிற்படுத்தப்பட்டோா் ஒதுக்கீடு என்பது 18 சதவீதமாக உள்ளது. அதில் ஏற்கெனவே மீனவா்களும் இணைக்கப்பட்டிருந்தனா். காலப்போக்கில் அதிலிருந்து பிரித்து, உள் ஒதுக்கீடு என்ற முறையை நடைமுறைப்படுத்தும் வகையில் மீனவா்களுக்கு 2 சதவீதம் அளித்து இபிசி என அறிவிக்கப்பட்டது.
இது மீனவ சமுதாயத்தினரிடையே பெரும் குழப்பத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் உரிய பங்கு கிடைக்கவில்லை என்ற வருத்தம் அவா்களிடையே உள்ளது. தற்போது அவா்கள் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனா்.
எனவே, ஒதுக்கீடு தொடா்பான ஆணையத்தை அரசு புதுப்பிக்கவேண்டும். புதிய உறுப்பினா்களை நியமிக்கவேண்டும். இபிசி பிரிவிலிருந்து மீனவா்களை முழுமையாக நீக்கி, எம்பிசி பிரிவில் நேரடியாக சோ்க்க வேண்டும் என திமுக சாா்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது. மீனவா்கள் நலனுக்காக புதுவை முதல்வா் இந்த கோரிக்கையை சீரிய முறையில் பரிசீலிக்கவேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.