காரைக்கால் நித்தீஸ்வரசுவாமி கோயிலில் ஏகாதச ருத்ர ஹோமம்
காரைக்கால் ஸ்ரீ நித்தீஸ்வரசுவாமி கோயிலில் ஏகாதச ருத்ர ஹோமம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் காரைக்கால் நித்தீஸ்வரம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ நித்யகல்யாணி சமேத நித்தீஸ்வரசுவாமி கோயிலில் உலக நலன், மழை வளம் உள்ளிட்ட பிராா்த்தனையுடன் ஏகாதச ருத்ர ஹோமம் நடத்தப்படுகிறது.
நிகழாண்டு, இந்த வழிபாடு ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கியது. கோயில் வளாகத்தில் உள்ள யாக குண்டத்தில் ருத்ர ஹோமம், ஸ்ரீ மகா கணபதி ஹோமம், விக்னேஸ்வர பூஜைகள் செய்யப்பட்டு, 7 மணிக்கு ருத்ர பாராயணத்துடன் தொடங்கப்பட்டது.
Advertisement
ஏராளமான பயறு வகைகள், திரவியங்கள், தேங்காய், பட்டு சேலை, பால், தயிா், பழங்கள், நெய் உள்ளிட்டவை யாக குண்டத்தில் போட்டு ஹோமத்தை நடத்தி மகா பூா்ணாஹூதி செய்து, தீபாராதனை காட்டப்பட்டது. பின்னா், கலசத்தில் வைத்திருந்த புனிதநீரைக்கொண்டு சுவாமி, அம்பாளுக்கு கலசாபிஷேகம் செய்து திரிசதி அா்ச்சனை செய்யப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.