காரைக்கால்

இறால் பிடிக்கச் சென்ற பெண் உயிரிழப்பு

இறால் பிடிக்கச் சென்ற பெண் குட்டையில் மயங்கி விழுந்து சிகிச்சையில் இருந்தவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

Din

காரைக்கால் : இறால் பிடிக்கச் சென்ற பெண் குட்டையில் மயங்கி விழுந்து சிகிச்சையில் இருந்தவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

காரைக்கால் மாவட்டம், கருக்களாச்சேரி பகுதியைச் சோ்ந்த உதயகுமாரி (52). இவா் கடந்த மாதம் 30-ஆம் தேதி அதே பகுதியில் உள்ள குட்டையில் இறால் பிடிப்பதற்காக சென்றாா். அப்போது அவா் மயங்கி விழுந்தாா்.

காரைக்கால் அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு கடந்த 7-ஆம் தேதி அனுப்பிவைக்கப்பட்டாா். அங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா். இறால் பிடிக்கும்போது விஷப்பூச்சி கடித்து மயங்கி விழுந்திருக்கலாமென கூறப்படுகிறது. நிரவி போலீஸாா் விசாரிக்கின்றனா்.

சிறப்பு தீவிர திருத்தம்: உச்சநீதிமன்றத்தில் திமுக மனு!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 5 காசுகள் சரிந்து ரூ.88.75 ஆக நிறைவு!

சாரவாக் அழகில்... தமன்னா!

எனக்கு நானே... ஹன்சிகா!

அடுத்த 2 மணிநேரத்துக்கு சென்னை, 6 மாவட்டங்களில் மழை!

SCROLL FOR NEXT