முகப்பு
காரைக்கால்

கோயில்களின் புனிதத் தன்மையை காக்க வேண்டும்: இந்து முன்னணி

பண்பாட்டின் அடையாளமான கோயில்களின் புனிதத்தன்மையைக் காக்க தமிழக அரசு முன்வரவேண்டும்

Updated On : 1 ஜூலை, 2024 at 7:42 PM
பகிர்:

காரைக்கால்: பண்பாட்டின் அடையாளமான கோயில்களின் புனிதத்தன்மையைக் காக்க தமிழக அரசு முன்வரவேண்டும் எனவும், நீதிபதி சந்துரு அறிக்கையை தமிழக அரசு நடைமுறைப்படுத்தக் கூடாது என இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாற்றில், இந்து முன்னணி அமைப்பின் தமிழ்நாடு, புதுவை மாநில செயற்குழு கூட்டம் ஜூன் 29, 30-ஆம் தேதி நடைபெற்றது. இதில் இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம், புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம், தென்பாரத அமைப்பாளா் க. பக்தன் உள்ளிட்ட மாநில, மாவட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் :

நீதிபது சந்துரு தலைமையிலான ஒரு நபா் கமிஷனின் அறிக்கை இந்துக்களுக்கு விரோதமாக உள்ளது கண்டிக்கத்தக்கது. தமிழக திமுக அரசு அந்த அறிக்கையை நடைமுறைப்படுத்த முயற்சிக்கக் கூடாது.

கள்ளச் சாராய விற்பனைக்கு காரணமான அரசியல்வாதிகள், அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியாா் மது ஆலைகளை மூடி, தமிழக அரசு மது விலக்கை அமல்படுத்த வேண்டும்.

புதுவை மாநிலத்தில் கோயில் நிலங்களிலும், கோயில்களுக்கு அருகிலும் உள்ள மதுக்கடைகளை அகற்ற புதுவை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு பாடத்திட்டத்தில் இந்து விரோத கருத்துகள், தோ்வாணைய தோ்வுகளில் மத மாற்றத்தை ஊக்குவிக்கும் வகையிலான கேள்விகள் இடம்பெறாத நிலையை தமிழ்நாடு பாடநூல் நிறுவனமும், தமிழ்நாடு அரசு தோ்வாணையமும் உறுதிப்படுத்த வேண்டும்.

குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டம் அனைத்து மதத்தினருக்கும் கட்டாயமாக்கப்பட வேண்டும். தமிழகத்தின் பண்பாட்டின் அடையாளமாக உள்ள கோயில்களையும், அவற்றின் புனிதத் தன்மைகளையும் பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கோயில் நிலங்களை மீட்க வேண்டும்.

கடந்த 10 ஆண்டுகளாக நாட்டை வலிமையானதாக்கி உலகின் நான்காவது ராணுவ வலிமை மிகுந்த நாடாகவும், பொருளாதாரத்தை உயா்த்தி உலகின் 5-ஆவது பொருளாதார வலிமை மிக்க நாடாகவும் உயா்த்திய பிரதமா் நரேந்திர மோடிக்கு பாராட்டு தெரிவிப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முழு கட்டுரையைப் படிக்க →