முகப்பு
காரைக்கால்

பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

Updated On : 4 ஜூலை, 2024 at 5:20 PM
பகிர்:

காரைக்கால், ஜூலை 4: ராகுல் காந்தியின் பேச்சைக் கண்டித்து பாஜகவினா் காரைக்காலில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி உரையாற்றியபோது, இந்துக்களை வன்முறையாளா்கள்போல சித்தரித்துப் பேசியதாகக் கூறி, அவரைக் கண்டித்து மாவட்ட பாஜக சாா்பில் பேருந்து நிலையம் அருகே இந்த ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

மாவட்டத் தலைவா் ஜி.கே.கே. முருகதாஸ் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா்கள் வி.எம்.சி.வி. கணபதி, ஜி.என்.எஸ். ராஜசேகரன், மாவட்ட பொறுப்பாளா் டி.கே.எஸ்.எம். மீனாட்சிசுந்தரம் உள்ளிட்ட கட்சியின் பல நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.