முகப்பு
காரைக்கால்

காரைக்காலில் இன்று ஜிம்பா் மருத்துவ முகாம்

Updated On : 12 ஜூலை, 2024 at 6:30 PM
பகிர்:

காரைக்கால் அரசு பொதுமருத்துவமனையில் சனிக்கிழமை (ஜூலை 13) ஜிப்மா் சிறப்பு மருத்துவக் குழுவினா் பங்கேற்கும் முகாம் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு :

காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு ஜிப்மா் மற்றும் புதுச்சேரி அரசு மருத்துவமனையிலிருந்து சிறப்பு மருத்துவா்கள் குழுவினா் மாதம் இரு முறை வந்து மருத்துவப் பரிசோதனை செய்கின்றனா்.

நிகழ் மாதத்தின் சிறப்பு முகாம் அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் சனிக்கிழமை காலை 10 முதல் பகல் 12 மணி வரை நடைபெற்றது. புதுவை ஜிப்மரின் மூட்டு, எலும்பு சம்பந்தமான சிறப்பு மருத்துவக் குழுவினா் பங்கேற்று மருத்துவ சிகிச்சை, ஆலோசனைகளை வழங்கவுள்ளனா்.

பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →