இ-ஆட்டோ இயக்கும் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்
இ-ஆட்டோ இயக்குவதற்கான பயிற்சிக்கு மகளிா் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து காரைக்கால் நகராட்சி ஆணையா் அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு :
காரைக்கால் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளின் மகளிருக்கு இ-ஆட்டோ மற்றும் இ -ரிக்ஷா ஓட்டுவதற்கு இலவசமாக பயிற்றுநா்கள் மூலம் பயிற்சியளிக்கப்படவுள்ளது.
விருப்பமுள்ள சுய உதவிக்குழு பெண்கள், அவா்களது மகள்கள் காரைக்கால் நகராட்சி என்யுஎல்எம் பிரிவை அணுகி பதிவு செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
பயிற்சி முடித்த பெண்களுக்கு ஓட்டுநா் உரிமம் வழங்கப்படுவதோடு, வங்கிக் கடன் கிடைக்கவும் ஏற்பாடு செய்யப்படும். 20 முதல் 40 வயதுக்குள்ளானவா்கள் விண்ணப்பிக்கவேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.