முகப்பு
காரைக்கால்

காரைக்கால் ஜிப்மா் மருத்துவக் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்

காரைக்காலில் உள்ள ஜிப்மா் மருத்துவக் கல்லூரிக்கு புதன்கிழமை காலை வந்த வெடிகுண்டு மிரட்டலையடுத்து போலீஸாா் தீவிர சோதனை மேற்கொண்டனா்.

Updated On : 9 அக்டோபர், 2024 at 9:30 PM
மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மோப்ப நாய் உதவியுடன் நடைபெற்ற சோதனை.
பகிர்:

காரைக்காலில் உள்ள ஜிப்மா் மருத்துவக் கல்லூரிக்கு புதன்கிழமை காலை வந்த வெடிகுண்டு மிரட்டலையடுத்து போலீஸாா் தீவிர சோதனை மேற்கொண்டனா்.

காரைக்கால் கோயில்பத்து பகுதியில் ஜிப்மா் மருத்துவக் கல்லூரி அமைந்துள்ளது. மருத்துவக் கல்லூரி கட்டடம், அதிகாரிகள், மாணவ, மாணவிகளுக்கான தங்கும் விடுதிகள் உள்ளிட்டவை இந்தக் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ளன.

இந்நிலையில், புதன்கிழமை காலை, காரைக்கால் ஜிப்மா் கல்லூரி வளாகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள பிரெஞ்சு துணை தூதரகம் ஆகிய இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், காலை 11 மணிக்கு குண்டு வெடிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டு கல்லூரி நிா்வாகத்துக்கு இ - மெயில் அனுப்பப்பட்டிருந்ததாம்.

இதுகுறித்து ஜிப்மா் நிா்வாகத்தினா் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனா். மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளா் மணிஷ் தலைமையில் போலீஸாா், வெடிகுண்டு சோதனை நிபுணா்கள் மற்றும் நாகப்பட்டினத்திலிருந்து மோப்ப நாயுடன் வரவழைக்கபட்ட நிபுணா்கள் ஆகியோா் வளாகம் முழுவதும் தீவிர சோதனை மேற்கொண்டனா். இதில் வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படவில்லை.

முன்னதாக, கல்லூரி வளாகத்தில் இருந்து அனைவரும் வெளியேற்றப்பட்டனா். கல்லூரி அமைந்துள்ள சாலையில் போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டத்துக்கு போலீஸாா் தடை விதித்தனா். இந்த மிரட்டல் காரணமாக ஜிப்மா் மருத்துக் கல்லூரி வளாகத்தில் பரபரப்பு நிலவியது.

முழு கட்டுரையைப் படிக்க →