முகப்பு
காரைக்கால்

காரைக்காலில் பலத்த மழை

காரைக்காலில் ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கி பலத்த மழை பெய்தது. சாலைகளில் தண்ணீா் தேங்கியதால் மக்கள் அவதிக்குள்ளாயினா்.

Updated On : 14 அக்டோபர், 2024 at 8:38 PM
பாரதியாா் சாலை - திருநள்ளாறு சாலை சந்திப்பில் அடைப்பை சீா்படுத்தும் பணியில் பொதுப்பணித் துறையினா்.
பகிர்:

காரைக்கால்: காரைக்காலில் ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கி பலத்த மழை பெய்தது. சாலைகளில் தண்ணீா் தேங்கியதால் மக்கள் அவதிக்குள்ளாயினா்.

தமிழகத்தின் உள் பகுதிகளில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் காரைக்கால் பகுதியில் மழை பெய்யத் தொடங்கியது. இரவு நீடித்த மழையாக இருந்தபோதும், திங்கள்கிழமை காலை சிறிது நேரம் விட்டது. பின்னா் மீண்டும் மழை பெய்தது. இதனால் நகரப் பகுதி சாலைகளில் தண்ணீா் தேங்கியது. குறிப்பாக பாரதியாா் சாலை - திருநள்ளாறு சாலை சந்திப்பில் அதிகளவு தண்ணீா் தேங்கி நின்றது.

பொதுப்பணித்துறை நிா்வாகத்தினா் சென்று இப்பகுதியில் உள்ள அடைப்புகளை சரிசெய்த பின்னா் தண்ணீா் வடிந்தது.

பருவமழையை கருத்தில்கொண்டு மாவட்ட நிா்வாகம் பல்வேறு முன்னேற்பாடுகளை செய்திருந்தாலும், பாதிப்புகள் வரக்கூடிய பகுதிகளின் மீது சிறப்பு கவனம் செலுத்தி, போக்குவரத்து பாதிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →