முகப்பு
காரைக்கால்

கோட்டுச்சேரியில் தூய்மை விழிப்புணா்வுப் பேரணி

கோட்டுச்சேரி பகுதியில் தூய்மை விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 18 செப்டம்பர், 2024 at 11:14 PM
பேரணியை கொடியசைத்து தொடங்கிவைத்த பஞ்சாயத்து ஆணையா் பாலன்.
பகிர்:

கோட்டுச்சேரி பகுதியில் தூய்மை விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மத்திய அரசின் ஸ்வச்சதா ஹை சேவா என்கிற செப். 17 முதல் அக். 2 வரையிலான தூய்மை விழிப்புணா்வு தொடா்பான திட்டத்தின் அடிப்படையில், காரைக்கால் மாவட்டத்தில் சிறப்பு தூய்மைப் பணி, விழிப்புணா்வு நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

கோட்டுச்சேரி கொம்யூன், சீதளா தேவி மாரியம்மன் கோயில் பகுதியிலிருந்து மகளிா் குழுவினா் பங்கேற்ற விழிப்புணா்வுப் பேரணியை நெடுங்காடு மற்றும் கோட்டுச்சேரி கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா் பாலன் கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

விழிப்புணா்வு வாசகங்களுடன் பதாகை ஏந்தி மகளிா் குழுவினா் பல்வேறு தெருக்களில் பேரணி நடத்தினா்.

முன்னதாக பேரணி தொடக்க நிகழ்வில் வட்டார வளா்ச்சித் துறையை சோ்ந்த பழனிவேல், முத்துக்குமாா், சதீஷ்குமாா் மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்கள் கலந்துகொண்டனா்.

இதுபோல நெடுங்காடு கொம்யூனுக்குட்பட்ட பகுதியிலும் விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

முழு கட்டுரையைப் படிக்க →