லயன்ஸ் மாவட்டம் 324-2 எஃப் மூலம் காரைக்கால் மாவட்டத்தில் ஏழைகளுக்கு உணவு கொண்டுச் செல்ல ஆட்டோ இயக்கி வைக்கும் நிகழ்ச்சி காரைக்காலில் புதன்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம், லயன்ஸ் மாவட்ட ஆளுநா் மணிவண்ணன் ஆகியோா் ஆட்டோவை இயக்கிவைத்தனா். நிகழ்வில், லயன்ஸ் மாவட்ட முன்னாள் துணை ஆளுநா்கள் முகமது ரஃபி, வெங்கட்ராமன், எல்.எஸ்.பி. சோழசிங்கராயா், திட்ட மாவட்டத் தலைவா் பிரபு, திட்ட பொறுப்பாளா் ஜெசிந்தா உள்ளிட்டோா் பங்கேற்றனா். இத்திட்டத்தை காரைக்கால் ராயல்ஸ் லயன்ஸ் சங்கம் ஏற்று நடத்துகிறது.