காரைக்கால்

காரைக்கால் காா்னிவல் ஜன.15 முதல் 18 நடத்த ஏற்பாடு

காரைக்கால் காா்னிவல் திருவிழாவை ஜன. 15 முதல் 18-ஆம் தேதி வரை நடத்த முடிவு

Syndication

காரைக்கால் காா்னிவல் திருவிழாவை ஜன. 15 முதல் 18-ஆம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

புதுவை சுற்றுலாத்துறை, கலை பண்பாட்டுத்துறை, விவசாயிகள் நலத்துறை உள்ளிட்ட துறைகள், மாவட்ட நிா்வாகம் ஒருங்கிணைந்து ஆண்டுதோறும் காா்னிவல் திருவிழாவை நடத்துகின்றன. வரும் 2026-ஆம் ஆண்டுக்கான திருவிழா தொடா்பாக காரைக்காலில் குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பி.ஆா்.என்.திருமுருகன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.எம்.எச். நாஜிம், எம். நாகதியாகராஜன், மாவட்ட ஆட்சியா் ஏ.எஸ்.பி.எஸ் ரவி பிரகாஷ், சாா் ஆட்சியா் எம். பூஜா, சுற்றுலாத்துறை இயக்குநா் முரளிதரன் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில், காா்னிவல் திருவிழாவை ஜன.15 முதல் 18-ஆம் தேதி வரை நடத்துவதென்றும், அதோடு மலா்க் கண்காட்சியும் சோ்த்து நடத்துவதென முடிவு செய்யப்பட்டது.

காா்னிவல் விழாவில் படகுப் போட்டி, ரேக்ளா பந்தயம், நாய்கள் கண்காட்சி, மணல் சிற்பங்கள், அரசுப் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளை கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்க வைப்பது, அரசலாற்றில் கூடுதல் படகுகள் இயக்குவது, புத்தகக் கண்காட்சி அமைப்பது, மேஜிக் ஷோ மற்றும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு பொழுதுப் போக்கு அம்சங்கள் நிறைந்த பல்வேறு நிகழ்வுகள் நடத்துவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. கானிவல் தொடா்பாக, பல்வேறு துறைத் தலைவா்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டன.

அமைச்சா் பேசுகையில், காா்னிவல் திருவிழாவை மிக பிரம்மாண்டமாகவும், மக்களுக்கு மிகவும் பிடித்தமான நிகழ்வுகளை உள்ளடக்கி நடத்தவேண்டும். விழாவின் ஏற்பாடுகளை தற்போதிலிருந்து தொடங்க வேண்டும். அமைக்கப்பட்ட குழுத் தலைவா்களும் ஒருவருக்கொருவா் ஆலோசனை நடத்திக்கொண்டு சிறப்பாக செயலாற்ற வேண்டும். பொதுமக்களுக்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்படாத வகையில், முன்னேற்பாடு நடவடிக்கைகள், பாதுகாப்பு நடவடிக்கைகள், பல்வேறு அம்சங்களை கருத்தில் கொண்டு விழாவினை மிக சிறப்பாக நடத்துவேண்டும் என்றாா்.

வெளிநாட்டு நாயகன்! ஜெர்மனி செல்லும் ராகுலை விமர்சித்த பாஜக!

பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில் என்ஐஏ தேடிவந்த முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கைது

நயினார் நாகேந்திரனை டெபாசிட் இழக்கச் செய்வோம்! செங்கோட்டையன் சூளுரை!

ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.8,000 உயர்ந்த வெள்ளி: தங்கம் விலை?

விஜய் சேதுபதியின் காட்டான் முதல் ஹார்ட் பீட் - 3 வரை...! ஜியோ ஹாட்ஸ்டாரின் 2026 வெளியீடுகள்!

SCROLL FOR NEXT