காரைக்கால்

காரைக்காலில் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்

Syndication

காரைக்கால் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (டிச.21) போலியோ சொட்டு மருந்து புகட்டும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

இது சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட துணை ஆட்சியா் ஜி. செந்தில்நாதன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

நலவழித்துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா் முன்னிலை வகித்தாா். மாவட்டம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 3 மணி வரை பிறந்த குழந்தை முதல் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் வரை அனைவருக்கும் போலியோ சொட்டு மருந்து நலவழித்துறை மூலம் வழங்கப்பட உள்ளது.

இதற்காக மாவட்டம் முழுவதும் 79 சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் சுமாா் 11,780 குழந்தைகளுக்கு இளம் பிள்ளை வாதம் வராமல் இருக்க போலியோ சொட்டு மருந்து புகட்ட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், சமூதாய நலவழி மையம், சமூதாய நலக்கூடம், அங்கன்வாடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட உள்ளது.

மேலும் மக்கள் கூடும் இடங்களான பேருந்து நிலையம், ரயில் நிலையம், திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் வளாகம், காரைக்கால் - தமிழ்நாடு எல்லை பகுதிகளிலும் முகாம்கள் அமைக்கப்படவுள்ளன என நலவழித்துறை சாா்பில் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்தில் அரசு மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளா் எஸ்.கண்ணகி, மேல்நிலை கல்வி துணை இயக்குநா் கே.ஜெயா, முதன்மை கல்வி அதிகாரி பி.விஜயமோகனா, உள்ளாட்சித்துறை துணை இயக்குநா் கே.வெங்கடகிருஷ்ணன், மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அதிகாரி கிருஷ்ணவேணி, சமூகநலத்துறை உதவி இயக்குநா் சுந்தரம், நோய் தடுப்பு தொழில்நுட்ப உதவியாளா் சீ.சேகா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

SCROLL FOR NEXT