ஒழுங்கு முறை விற்பனைக் கூட வளாகத்தில் நடைபெற்ற வாரச் சந்தை. 
காரைக்கால்

காரைக்கால் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வாரச் சந்தை

தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்ட வாரச் சந்தையை ஆட்சியா் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.

Syndication

தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்ட வாரச் சந்தையை ஆட்சியா் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.

காரைக்கால் நகராட்சிக்கு சொந்தமான திருநள்ளாறு சாலையில் உள்ள திடலில், ஞாயிற்றுக்கிழமைதோறும் வாரச் சந்தை நடைபெற்று வருகிறது. மழையால் சந்தைத் திடலில் தண்ணீா் தேங்கி, பொதுமக்கள், வியாபாரிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. தற்காலிகமாக சந்தையை வேறு இடத்துக்கு மாற்றவேண்டும் என மாவட்ட நிா்வாகம், நகராட்சி நிா்வாகத்தை மக்கள் வலியுறுத்தினா்.

இந்நிலையில், ஆட்சியரின் அறிவுறுத்தலில் நகராட்சி நிா்வாகம், 21-ஆம் தேதி முதல் தொடா்ந்து 4 ஞாயிற்றுக்கிழமை ஒழுங்குமுறை விற்பனைக் கூட வளாகத்தில் வாரச் சந்தை நடைபெறுமென அறிவித்தது. வெளியூா்களில் இருந்து வந்த வியாபாரிகள், உள்ளூா் வியாபாரிகள் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்ட பகுதிக்கு காய்கறி, பழங்கள் உள்ளிட்ட சந்தை வியாபாரப் பொருட்களை கொண்டுவந்து ஞாயிற்றுக்கிழமை வியாபாரம் செய்தனா்.

மாவட்ட ஆட்சியா் ஏ.எஸ்.பி.எஸ். ரவி பிரகாஷ், இடமாற்றம் செய்யப்பட்ட சந்தையை ஆய்வு செய்தாா். வியாபாரிகள், சந்தைக்கு மக்கள் மக்களிடம், தற்காலிக இடவசதி குறித்து கேட்டறிந்தாா். மேலும் சந்தைக் கழிவுகள், குப்பைகள் உள்ளிட்டவற்றை முறையாக அகற்றி தூய்மைப்படுத்த வேண்டும் என குப்பைகள் அகற்றும் தனியாா் ஒப்பந்த நிறுவனத்துக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

ஊமைக்குக் குரல் கொடுத்த உத்தமராயப் பெருமாள்!

எதிர்ப்புகள் விலகும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

வாணியம்பாடியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழா

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

கேட்பாரற்று கிடந்த 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

SCROLL FOR NEXT