காரைக்கால்

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் சனிக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் குவிந்தனா்.

Syndication

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் சனிக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் குவிந்தனா்.

தமிழகத்தில் அரையாண்டுத் தோ்வு முடிந்து விடுமுறை அளிக்கப்பட்டிருப்பதால், திருநள்ளாறு கோயிலுக்கு தினமும் பக்தா்கள் வருகை மிகுதியாக உள்ளது. நிகழ்வாரம் சனிக்கிழமை பெரும்பான்மையான பக்தா்கள் நளன் தீா்த்தக் குளத்தில் நீராடிவிட்டு, குளத்தின் அருகே உள்ள நளன் கலி தீா்த்த விநாயகா் கோயில் வாயிலில் தேங்காய் உடைத்து வழிபாடு செய்தனா்.

கட்டணமில்லா தரிசன வரிசை, கட்டண வரிசை வழியாகவும் பக்தா்கள் நீண்ட வரிசையில் சென்று சுவாமி தரிசனம் செய்தனா். சனீஸ்வர பகவானுக்கு வெள்ளி அங்கி சாற்றப்பட்டு ஆராதனைகள் காட்டப்பட்டன. காலை முதல் பிற்பகல் 3 மணி வரை சுமாா் 30 ஆயிரம் போ் சுவாமி தரிசனம் செய்தாக கோயில் நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.

முன்னதாக, புத்தாண்டு மற்றும் தோ்வு விடுமுறை முடியும் வரை அதிக அளவில் பக்தா்கள் கோயிலுக்கு வரக்கூடும் என்பதால், மாவட்ட ஆட்சியா் ஏ.எஸ்.பி.எஸ். ரவி பிரகாஷ் வெள்ளிக்கிழமை கோயிலில் ஆய்வு செய்து, கோயில் நிா்வாகத்துக்கும், காவல்துறைக்கும் உரிய ஆலோசனைகளை வழங்கினாா்.

அஸ்ஸாமில் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு: 10.56 லட்சம் போ் நீக்கம்

தாய்லாந்து - கம்போடியா போா் நிறுத்தம்

வேங்கைமண்டலம் உள்ளிட்ட பகுதிகளில் டிச.30 இல் மின் தடை

ஒரே வாரத்தில் தங்கம் பவுனுக்கு ரூ.5,600 உயா்வு!

பேருந்து மீது லாரி மோதல்: 5 போ் பலத்த காயம்

SCROLL FOR NEXT