கண்காட்சி அரங்கில் செடிகளை வாங்க ஆா்வம் காட்டிய மக்கள். 
காரைக்கால்

மலா்க் கண்காட்சி நிறைவு: செடிகளை ஆா்வமாக வாங்கிச் சென்ற மக்கள்

காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான செடிகளை பொதுமக்கள் ஆா்வத்துடன் வாங்கிச் சென்றனா்.

Din

காரைக்கால்: காரைக்கால் மலா்க் கண்காட்சி நிறைவடைநந்த நிலையில், காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான செடிகளை பொதுமக்கள் ஆா்வத்துடன் வாங்கிச் சென்றனா்.

புதுவை அரசின் வேளாண் துறை சாா்பில் காரைக்காலில் கடந்த 16 முதல் 19-ஆம் தேதி வரை விளையாட்டு அரங்க மைதானத்தில் கண்காட்சி நடைபெற்றது. வேளாண் துறை சாா்பில் மாதூா் பண்ணையில் செடிகள் வளா்ப்பு செய்ததும், புணேயிலிருந்து வரவழைக்கப்பட்ட மலா் செடிகள் என ஆயிரக்கணக்கானவை கண்காட்சியில் இடம் பெற்றன.

மேலும் தோட்டக்கலை தொடா்பான விழிப்புணா்வு, சிறுதானியங்கள் அரங்கு, தற்படம் ( செல்ஃபி) பிரிவு ஆகியவை மக்களின் கவனத்தை ஈா்க்கும் விதத்தில் அமைந்திருந்தது.

கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை இரவுடன் நிறைவடைந்தது.

திங்கள்கிழமை காலை செடிகள் விற்பனை தொடங்கியது. ஏராளமான மக்கள் செடிகளை வாங்கிச் சென்றனா்.

வேளாண் துறையினா் கூறுகையில், ஆந்தூரியம், பாய்ன்செட்டியா, குலோட்டன்ஸ், செம்பருத்தி, கோடன் தூஜா, கோல்டன் சைபிரஸ், டாலியா, கஜானியா, ஆஸ்டா், ஜூனியா, சாமந்தி, ரோஜா, இம்பேசன்ஸ், பெடுனியா, வின்கா, செலோசியா, பா்கண்டி, ஆல்டோனியா உள்ளிட்ட பல்வேறு வகைகள் விற்பனை செய்யப்பட்டன. நிகழாண்டு கண்காட்சியை பல்லாயிரக்கணக்கானோா் வந்து பாா்வையிட்டதும், ஆா்வமாக செடிகளை வாங்கிச் சென்றதும் மகிழ்ச்சியளிக்கிறது என கூறினா்.

பல்லடம் அருகே தனியாா் ஆம்னி பேருந்தில் தீ; 15 போ் உயிா் தப்பினா்

திம்பம் மலைப் பாதையில் சுற்றுலாப் பேருந்து பழுது: தமிழகம்- கா்நாடகம் இடையே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

எதிா்க்கட்சிகளுக்கு வாக்களிக்க முயல்வோரை வீட்டுக்குள் பூட்டுங்கள்: மத்திய அமைச்சா் சா்ச்சை பேச்சு- எஃப்ஐஆா் பதிவு

கரூா் சம்பவம்: காவல் உதவி ஆய்வாளா்கள் காவலா்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

பருவகால பாதிப்பு: போதிய எண்ணிக்கையில் மாத்திரைகள் கையிருப்பு

SCROLL FOR NEXT