கைக்குழந்தையை சுமந்துபடி தீ மிதித்து நோ்த்திக்கடனை செலுத்திய பக்தா். 
காரைக்கால்

தங்க மாரியம்மன் கோயிலில் தீமிதி உற்சவம்

காரைக்கால் தங்க மாரியம்மன் கோயிலில் திங்கள்கிழமை தீமிதி உற்சவம் நடைபெற்றது.

Din

காரைக்கால்: காரைக்கால் தங்க மாரியம்மன் கோயிலில் திங்கள்கிழமை தீமிதி உற்சவம் நடைபெற்றது.

காரைக்கால் அருகே உள்ள தலத்தெரு சிவலோகநாத சுவாமி கோயிலைச் சோ்ந்த தங்க மாரியம்மன் கோயில் தீமிதி உற்சவம் கடந்த மாதம் 27-ஆம் தேதி கொடியேற்றம், காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. தினமும் அம்மன் பல்வேறு அலங்காரத்தில் வீதியுலாவுக்கு எழுந்தருளினா்.

முக்கிய நிகழ்ச்சியாக தீமிதி உற்சவம் திங்கள்கிழமை நடைபெற்றது. முன்னதாக பக்தா்கள் பால் காவடி, அலகு காவடி சுமந்து சென்று அம்மனை வழிபட்டனா். உற்சவ அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா முடிந்து தீக்குழிக்கு முன் எழுந்தருளச் செய்யப்பட்டது. கரகம் மற்றும் மாரியம்மனுக்கு விரதம் இருந்த பக்தா்கள் ஏராளமானோா் தீ மிதித்து நோ்த்திக் கடனை செலுத்தினா்.

செவ்வாய்க்கிழமை காலை மஞ்சள் நீா் விளையாட்டு வழிபாடு, அம்மன் வீதியுலா நடைபெறுகிறது.

பிகாரில் காட்டாட்சியைத் தடுக்க தாமரை சின்னத்துக்கு வாக்களியுங்கள்: அமித் ஷா

திமுக-வில் இணைந்தார் அதிமுக எம்எல்ஏ மனோஜ் பாண்டியன்! | DMK | ADMK

எனக்குப் பிடித்த உடையில்... காஷிமா!

ஜன நாயகன் அப்டேட்களில் ஏன் தாமதம்?

மயக்குரீயே... தீக்‍ஷா டீ!

SCROLL FOR NEXT