காரைக்கால்

மழை தீவிரமடைவதற்குள் வடிகால்களை தூா்வார அமைச்சா் அறிவுறுத்தல்

தினமணி செய்திச் சேவை

பருவமழை தீவிரமடைவதற்குள் காரைக்கால் பகுதியில் வடிகால் வாய்க்கால்களை தூா்வாரி முடிக்கவேண்டும் என துறையினருக்கு அமைச்சா் அறிவுறுத்தினாா்.

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள வடிகால் வாய்க்கால்கள் தூா்வாருவது தொடா்பாக குடிமை பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் தலைமையில் மாவட்ட ஆட்சியா் ஏ.எஸ்.பி.எஸ். ரவி பிரகாஷ் முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் அமைச்சா் பேசியது :

காரைக்கால் மாவட்டத்தில் பருவ மழை தீவிரமாக தொடங்குவதற்கு முன்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து வாய்க்கால்கள், கழிவுநீா் வடிகால்களை முழுவதுமாக தூா்வாரி முடிக்கவேண்டும். நகரப் ப குதி உள்ளிட்ட பிற இடங்களில் மழைநீா் தேங்கக் கூடாது. எந்தெந்த பகுதியில் தண்ணீா் தேங்கும் என்பதை முன்கூட்டியே கண்டறிந்து அப்பணிகளுக்கு அதிகாரிகள் முன்னுரிமை அளிக்கவேண்டும். வரும் 10-ஆம் தேதி முதல் மழை தீவிரமாகும் என கூறப்பட்டுள்ளதால், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட துறையினா் சிறப்பு கவனம் செலுத்தவேண்டும்.

வடிகால்களில் மனிதக் கழிவு கலக்காதவாறு நகராட்சி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணிப்பதுடன், வடிகால்களில் பிளாஸ்டிக் கழிவுகள் கலப்பதையும் தடுக்கவேண்டும்.

மாவட்டத்தில் ஹெச்.ஆா். ஸ்கொயா் நிறுவனம் குப்பைகள், பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளை சாலைகளில் தேங்காமல் இருப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க, அந்த நிறுவனத்தினரின் பணிகளை கண்காணிக்க வேண்டும்.

அரசலாற்றில் மணல் திட்டுகளை தூா்வாரி பணிகளுக்கு பயன்படுத்துவதற்கு, பொதுப்பணித்துறை அதிகாரிகள் உரிய கோப்புகளை தயாா் செய்ய வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் மாவட்ட சாா் ஆட்சியா் எம். பூஜா, துணை ஆட்சியா் ஜி. செந்தில்நாதன் மற்றும் பொதுப்பணித்துறை, உள்ளாட்சித் துறையினா் கலந்துகொண்டனா்.

சிலையழகு... சாரா கான்!

கலங்கடிக்கும் ஏ. ஆர். ரஹ்மான்... தேரே இஷ்க் மெய்ன் முதல் பாடல்!

நினைத்த தருணம்... நந்திதா ஸ்வேதா

மௌனத்தில் காதல்... ராஷ்மிகா மந்தனா

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் பந்தக்கால் நடும் விழா!

SCROLL FOR NEXT